
Anne Silva
Poet
They say that the pen is mightier than the sword. I say that every line typed on a notes app is mightier than a firearm. I write for myself and for everyone I see, and don't see. I write for nature and the ones struck voiceless by society. I write for you, I write for me, I write for us.
Instagram - @poetryofdust
1. What is the message your art is trying to convey?
My poetry tends to be personal most of the time, I find myself inspired by emotions that I experience. So when my poetry takes a political turn, it is about issues that are very personal to me, such as the daily oppression a woman goes through, economic issues that I experience, and nature related incidents.
2. When did your creative journey start?
I wrote my first short story at the age of eight. Coming from a family of avid book readers, I’ve grown up among piles of books and magazines. I wrote my first song at the age of 13, and poetry became my thing when I started going through depression in my late teen years.
3. Who are your biggest inspirations?
I consider myself a romantic poet of the 21st century; my chief inspirations are the likes of William Wordsworth and John Keats. I am also greatly inspired by the raw emotion in Vivimarie Vanderpoorten’s poetry and the experimental styles of Meena Kandasamy. So I think my poetry falls somewhere between these two completely different styles.
4. What is holding back Sri Lankan creatives?
The mindset of the society. Most audiences are not ready to accept a new concept due to cultural restrictions. I’ve also noticed that they are a bit intimidated by new styles and wish to remain with the traditional. This is what we must challenge.
5. Run us through your creative process?
I don’t think I really have a creative process. I believe in John Keats when he said, “If poetry comes not as naturally as the leaves to a tree, it had better not come at all.” So I write at odd times, in odd places, while walking on the road, or waking up from sleep in the early hours of the morning. Sometimes I brush out a few words before I share these, but I like them raw- spelling mistakes and all. My trusty Notes App is there with me throughout the entire process.
6. Why is art important to Sri Lankan society, especially in a time like this?
Art is not something new to Sri Lanka. We’ve always had an artistically rich culture. If used right, art can make a great change. Not everyone can make it to a protest physically due to multiple reasons. But with art, you get to voice your thoughts from wherever you are, even anonymously! They say the pen is mightier than the sword, and personally, I agree.
7. What will the future of creative expression be like?
With the advent of AI, this is a tough one. Computer-generated artwork tends to increase in quality and quantity daily, drowning out authentic artists on social media. But a computer can never reach the levels of creativity a human has. It’s just that we’ve gotta be innovative with bringing our art out. The projections at KCC- that was a wonderful method to bring authentic art out.
8. What is your major goal as an artist?
Expression. I express myself the best in my writing. And if my writing can make a change, inspire someone, or break a bad habit, that’s a victory that money can never buy.
9. Do you believe in art collaboration or do you think it affects their individual creative expression?
Well, it works both ways. Individually created pieces can carry more of the artist in them, but collaborative pieces carry a story of their own. The bond made through art is one of the strongest. A soloist can do wonders, but a choir has magic of its own.
Like I mentioned in my creative process, it has to come naturally. I've tried to write to a theme and a word count for competitions but they never come out right. I believe art is at its finest when you pour your soul into them. Cry, bleed, laugh into your art- your audience is going to feel it.
1. உங்கள் கலை தெரிவிக்க முயற்சிக்கிக்கும் கருத்து என்ன?
எனது கவிதைகள் பெரும்பாலும் எனக்கு சொந்தமானதாகவே இருக்கும். நான் அனுபவிக்கும் உணர்ச்சிகளால் என்னையே ஊக்கமளிக்கப்பட்டுள்ளேன். எனவே எனது கவிதை ஏதேனும் அரசியல் திருப்பத்தை எடுக்கும் போது, அவை எனக்கு மிகவும் தனிப்பட்ட பிரச்சனைகள் பற்றியதாகவே அமையும். அதாவது
ஒரு பெண் அன்றாடம் சந்திக்கும் ஒடுக்குமுறைகள், நான் அனுபவித்த பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் இயற்கை தொடர்பான சம்பவங்கள்.
2. உங்கள் கலை பயணம் எப்போது ஆரம்பமாகியது?
நான் எனது முதல் சிறுகதையை எட்டு வயதில் எழுதினேன். ஆர்வமுள்ள புத்தக வாசிப்பாளர்களின் குடும்பத்திலிருந்து வந்த நான், புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளின் குவியல்களுக்கு மத்தியில் வளர்ந்தவன். நான் எனது முதல் பாடலை 13 ஆவது வயதில் எழுதினேன். எனது இளம் வயதின் பிற்பகுதியில் நான் மனச்சோர்வைச் சந்திக்கத் முகங்கொடுத்த போது கவிதை எனக்குரிய ஒன்றாகவே மாறியது.
3. உங்களின் மிகப்பெரிய உத்வேகங்கள் யார்?
நான் என்னை 21 ஆம் நூற்றாண்டின் காதல் கவிஞனாகக் கருதுகிறேன்; எனது முக்கிய உத்வேகங்கள் William Wordsworth மற்றும் John Keats ஆகியோர். Vivimarie Vanderpoorten இன் கவிதையில் உள்ள உணர்ச்சிகள் மற்றும் Meena Kandasamy இன் சோதனை பாணிகளின் மூலமும் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். எனவே எனது கவிதை முற்றிலும் வேறுபட்ட இந்த இரு பாணிகளுக்கும் இடையில் உள்ளடங்கும் என்று நினைக்கிறேன்.
4. எது இலங்கைப் கலைஞர்களைத் தடுத்து நிறுத்துகிறது?
சமூகத்தின் மனநிலை. கலாச்சாரக் கட்டுப்பாடுகள் காரணமாக பெரும்பாலான பார்வையாளர்கள் புதிய கருத்துக்களை ஏற்கத் தயாராக இல்லை. அவர்கள் புதிய வகையான பாணிகளுக்கு கொஞ்சம் அஞ்சுவதையும் பாரம்பரியத்துடன் இருக்க விரும்புவதையும் நான் கவனித்தேன். இதைத்தான் நாம் எதிர்த்து முகங்கொடுக்க வேண்டும்.
5. எங்களை உங்களின் கலை செயல்பாட்டிற்குள் எடுத்து செல்லமுடியுமா?
எனக்கு உண்மையில் ஒரு கலை செயல்முறை உள்ளது என நான் நினைக்கவில்லை. John Keats சொன்னதை நான் நம்புகிறேன், அதாவது "மரத்திற்கு இலைகள் வருவது போல் கவிதை இயல்பாக வரவில்லை என்றால், அது வராமல் இருந்ததே நல்லது". அதனால் நான் வழக்கம் இல்லாத நேரங்களிலும் இடங்களில், பாதையில் நடக்கும்போது அல்லது அதிகாலையில் தூங்கி எழும்பும்போது எழுதுவேன். சிலநேரங்களில் நான் இவற்றைப் பகிர்வதற்கு முன் சில வார்த்தைகளைத் அகற்றிவிடுவேன், ஆனால் அவற்றிலிருக்கும் எழுத்துப் பிழைகள் மற்றும் அனைத்தையும் நான் விரும்புகிறேன். எனது நம்பகத்தன்மையுடைய Notes App எனது முழு செயல்முறையிலும் என்னுடன் இருக்கும்.
6. இலங்கை சமூகத்திற்கு கலை ஏன் முக்கியமானது, குறிப்பாக இது போன்ற ஒரு காலத்தில்?
கலை இலங்கைக்கு புதிதல்ல. எங்களிடம் எப்போதும் வளமான ஒரு கலை கலாச்சாரம் உள்ளது. நாம் கலையை சரியாகப் பயன்படுத்தினால் பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும். பல காரணங்களுக்காக அனைவராலும் உடல்ரீதியாக எதிர்ப்பு தெரிவிக்க முடியாது, ஆனால் கலை மூலம், நீங்கள் எங்கிருந்தாலும், தன் விபரங்களை வெளியிடாமலே கூட உங்கள் எண்ணங்களுக்கு குரல் கொடுக்கலாம்! பேனா வாளை விட வலிமையானது என்று அவர்கள் கூறுவதை, தனிப்பட்ட முறையில் நான் ஒப்புக்கொள்கிறேன்.
7. கலை வெளிப்பாட்டின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
AI இன் வருகையுடன், இது கடினமான ஒன்றாகும். கணினியால் உருவாக்கப்பட்ட கலைப்படைப்புகள் தினசரி தரத்திலும் அளவிலும் அதிகரித்து வருவதால், சமூக ஊடகங்களிலுள்ள உண்மையான கலைஞர்களை புறக்கணிக்கிறது. ஆனால் ஒரு மனிதனின் படைப்பாற்றலின் அளவை ஒரு கணினியால் ஒருபோதும் எட்டவே முடியாது. நமது கலையை வெளிக்கொண்டு வருவதில் நாம் புதுமையாக இருக்க வேண்டும். KCC இல் இருந்த செயல்திட்டம் உண்மையான கலையை வெளி கொண்டுவருவதற்கான ஒரு அற்புதமான முறையாகும்.
8. கலைஞராகிய உங்களின் முக்கிய குறிக்கோள் என்ன?
உணர்ச்சி வெளிப்பாடு (Expression). நான் எழுத்தில் தான் எனது சிறந்ததை வெளிப்படுத்துகிறேன். மேலும் எனது எழுத்தினால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவோ, ஒருவரை ஊக்குவிக்கவோ அல்லது ஒரு கெட்ட பழக்கத்தை முறியடிக்கவோ முடிந்தால், அதுவே பணத்தால் வாங்க முடியாத வெற்றி ஆகும்.
9. கலை ஒத்துழைப்பில் உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா அல்லது அது அவர்களின் தனிப்பட்ட படைப்பு வெளிப்பாட்டைப் பாதிக்கும் என நினைக்கிறீர்களா?
இது இரண்டு வழிகளிலும் பயனளிக்கும். தனித்தனியாக உருவாக்கப்பட்ட படைப்பு அவற்றில் அதிகமான கலைஞரைக் கொண்டு செல்ல முடியும், ஆனால் கூட்டுத் படைப்புகளில் அவற்றின் சொந்த கதையையே கொண்டு செல்ல முடியும். கலையின் மூலம் ஏற்படுத்தப்படும் பிணைப்பு மிகவும் வலுவான ஒன்றாகும். ஒரு தனி பாடகரால் அதிசயங்களைச் செய்ய முடியும், ஆனால் ஒரு குழு இசை அதன் சொந்த மந்திரத்தையே கொண்டுள்ளது.
எனது கலை செயல்பாடு பற்றி நான் குறிப்பிட்டது போல், அது இயல்பாக வர வேண்டும். ஒரு கருப்பொருளின் கீழ் போட்டிக்காக குறிப்பிட்ட சொற்கள் எண்ணிக்கையில் எழுத முயற்சித்தேன், ஆனால் அது சாத்தியமாகவில்லை. உங்கள் ஆன்மாவை கலைக்கு உட்செலுத்தும் போதே கலை மிகச்சிறந்ததாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். நீங்கள் உங்கள் கலைக்காக அழ, இரத்தம் சிந்த, சிரி- அவ்வாறே உங்கள் பார்வையாளர்களும் அதை உணருவார்கள்.