
Photographer
I believe art has a big effect in changing people’s attitudes and perspectives. That will have a direct impact on society and the economy. A country with a good art and entertainment industry can be developed really well, and it’s a good society to live in.
Instagram - @shaki_photobird
What is the message your art is trying to convey?
To enjoy the little things in everyday life and making people aware of other cultures: I do documentary photography around the country. I document different cultures, habits and things that are happening around. Most of those things are about culture, tradition and how different people go about their daily lives. I put a lot of aesthetics into it and look for nice stories in a particular community or individual. I bring them out through visual frames. I believe that we all have our cultures and traditions and we should live in harmony.
When did your creative journey start?
It started around Grade 10 when I was 14 years old. I got a camera and starting taking photos, I got good comments so I kept doing it. It started as a hobby and I really enjoyed it. It gave my life some meaning and I’m still going strong.
Who are your biggest inspirations?
Local artists and photographers inspired me in the beginning. But my biggest role model is Steve McCurry who is quite a famous documentary photographer. My style also goes close to that.
What is holding back Sri Lankan creatives?
One thing would be financial problems. To pursue your art you have to spend on your tools. If you’re a painter you have to invest in paints and brushes etc. And also a lot of artists don’t know how to make money out of their work. They are bit hesitant and are not willing to take risks. We also need a strong community for the arts who can share, find inspiration and also platforms to put work out and find exposure.
Run us through your creative process?
First I find inspiration; maybe it’s a book, photo, an incident or something I happen to come across. I get a feeling that there could be a nice story; something that I can bring to a visual frame. Then I put the photographic elements such as shapes, colours and light. And within that visual element I try to bring out all what I’m trying to express. I might take several photographs at that place and I go on to post-production where I like to look more deep into what I captured and sometimes add more details, enhance the photograph. Sometimes I put one photograph or few into a story.
Why is art important to Sri Lankan society, especially in a time like this?
It’s very important. When a country has a good creative industry, then the people have good attitudes. People who have good attitude have good conduct; this has a direct effect on the economy. Art can be seen as a medium that can change people’s behavior. Art talks about humanity, love, friendship, freedom, economy, harmony, diversity, rights and lots more. It’s a medium that can reach people’s mindset and change it. We need responsible citizens to transform a country. We blame the government but the government is the reflection of the people. If people are more responsible towards everything they can bring about change. To make that change, art is a strong medium.
What will the future of creative expression be like?
With the new technology coming like AI and mediums like projection, holograms and new tools that are able to create illustrations very close to a real image; the kind of art that comes out will change. Whatever comes out is a tool for a creative person to use. Even art exists in a dynamic, it isn’t stationary. So with the new technology, art will change how it reaches people.
What is your major goal as an artist?
Photography is visual communication. I can create things that can make a direct impact on people; change their perception and attitude, I can heal them and move them through my photos. This is a medium that brings out what is real. If I can move people through my efforts, that will be my goal.
Do you believe in art collaboration or do you think it affects their individual creative expression?
I do believe in collaboration. I believe by collaborating you can bring something unique and special. If you are collaborating with someone you should make sure it is a proper connection. In a collaboration with two or more people, if someone can’t put their idea out, then that collaboration fails . The collaboration should be a proper one. Collaborators should be on the same page. If you have that you can bring it out really well. Otherwise, being an individual art is also great if you can’t work in collaboration.
What is affective art: pure catharsis or conscious work?
You can plan up to an extent. The rest is up to the universe. You are the right place at the right time. There have been a lot of places where I had happened to have a camera so I was at the right time. It could happen any time. It could happen while I’m coming home, while I’m going on a trip or it could happen when I’m going about it planned. You could never know. In my type of work, which is documentary, it’s better to have a camera all the time. You never know when you will get the right moment. There were several times, where I never planned a thing, but I came across something and it went really well. You can plan things up to an extent. But sometimes even with a plan you won’t get what you want. And I’m not talking about planned photoshoots. In documentary type work, that’s not how it works. Sometimes you can plan and get what you want, and sometimes it’s not what you expect. You have to be very aware and alert.
1. உங்கள் கலை தெரிவிக்க முயற்சிக்கிக்கும் கருத்து என்ன?
நான் அன்றாட வாழ்வில் அனுபவிக்கவும் சிறிய விடயங்களை பற்றியும் பிற கலாச்சாரங்களைப் பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்த நாடளாவிய ரீதியில் ஆவணப் புகைப்படம் எடுக்கிறேன். வெவ்வேறு கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் நம்மை சுற்றி நடக்கும் விடயங்களை நான் ஆவணப்படுத்துகிறேன். அவற்றில் பெரும்பாலானவை விடயங்கள் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வெவ்வேறு மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை எப்படிப் பின்பற்றுகிறார்கள் என்பன பற்றியாகும். நான் அதில் நிறைய அழகியல்களை உட்செலுத்தி, ஒரு குறிப்பிட்ட சமூகத்திலோ அல்லது தனிநபரிலோ ஒரு நல்ல கதைகளைத் தேடி, அவற்றை காட்சிச் சட்டங்கள் மூலம் வெளியே கொண்டு வருகிறேன். நம் அனைவருக்கும் நமது கலாச்சாரங்கள் மற்றும் பாரம்பரியங்கள் உள்ளன, என்பதோடு நாம் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று நான் நம்புகிறேன்.
2. உங்கள் கலை பயணம் எப்போது ஆரம்பமாகியது?
இது எனக்கு 14 வயதாக இருந்தபோது அதாவது 10 ஆம் வகுப்பில் தொடங்கியது. எனக்கு ஒரு கேமரா கிடைத்ததிலிருந்து புகைப்படம் எடுக்க ஆரம்பித்தேன். எனது புகைப்படம் குறித்து நல்ல கருத்துகள் கிடைத்ததால் அதனை நான் தொடர்ந்து செய்தேன். முதலில் இது ஒரு பொழுதுபோக்காக தொடங்கியது, நானும் அதை மிகவும் ரசித்து செய்தேன். அது என் வாழ்க்கைக்கு சில அர்த்தங்களைக் கொடுத்தது மட்டுமன்றி நான் இன்னும் சிறப்பாக செயல்பட்டுவருகிறேன்.
3. உங்களின் மிகப்பெரிய உத்வேகங்கள் யார்?
உள்ளூர் கலைஞர்களும் புகைப்படக் கலைஞர்களும் ஆரம்பத்தில் என்னை ஊக்கப்படுத்தினர். ஆனால் எனது மிகப்பெரிய முன்மாதிரி Steve McCurry, அவர் மிகவும் பிரபலமான ஆவணப்பட புகைப்படக் கலைஞர் ஆவார். என்னுடைய புகைப்பட பாணியும் அவருடையதற்கு ஒத்ததாக செல்கிறது.
4. எது இலங்கைப் கலைஞர்களைத் தடுத்து நிறுத்துகிறது?
நிதி சிக்கல்களை கருதலாம். உங்கள் கலையைத் தொடர, உங்கள் கருவிகளுக்குச் பணம் செலவிட வேண்டும். நீங்கள் ஒரு ஓவியராக இருந்தால், நீங்கள் வண்ணப்பூச்சுகள் மற்றும் தூரிகைகள் போன்றவற்றிற்கு முதலீடு செய்ய வேண்டும். மேலும் பல கலைஞர்கள் தங்கள் வேலையில் பணம் சம்பாதிப்பது எப்படி என்று அவர்களுக்கு தெரியாது. அவர்கள் சற்று தயங்குகிறார்கள் மற்றும் சவால்களுக்கு முகங்கொடுக்க தயாராகவும் இல்லை. நமக்கு நமது படைப்புகளை பகிர்ந்துகொள்ள, ஊக்குவிக்கக்க, வலுவான சமூகமொன்று அவசியம் மற்றும் தமது படைப்புகளை வெளிப்படுத்த அல்லது காட்சிபடுத்த சீரான தளங்கள் அவசியம்.
5. எங்களை உங்களின் கலை செயல்பாட்டிற்குள் எடுத்து செல்லமுடியுமா?
முதலில் நான் ஓர் உத்வேகத்தை கண்டறிவேன்; ஒருவேளை அது ஒரு புத்தகம், புகைப்படம், ஒரு சம்பவம் அல்லது நான் சந்தித்த ஏதாவதொன்று. எனக்கு அதில் காட்சி சட்டத்திற்குள் கொண்டு வரக்கூடிய ஒரு நல்ல கதை இருக்கக்கூடும் என்ற உணர்வு வரும். பின்னர் நான் வடிவங்கள், வண்ணங்கள் மற்றும் ஒளி போன்ற புகைப்பட கூறுகளை வைத்து, அந்த காட்சி பகுதியில் நான் வெளிப்படுத்த முயற்சிக்கும் அனைத்தையும் வெளிக்கொண்டுவர முயற்சிக்ப்பேன். நான் சிலநேரம் அவ்விடத்தில் பல புகைப்படங்களை எடுக்க வாய்ப்புண்டு அதன்பின் நான் பிடித்த படம் இன்னும் ஆழமாகப் பார்க்கவும் சிந்திக்கவும் மேலதிக விபரங்களைச் சேர்க்கவும், புகைப்படத்தை மெருகூட்டவும் நேரம் செலவிடுவேன். சில நேரங்களில் நான் ஒரு கதையில் ஒரு புகைப்படம் மட்டும் அல்லது பல புகைபடங்களை வெளியிடுவேன்.
6. இலங்கை சமூகத்திற்கு கலை ஏன் முக்கியமானது, குறிப்பாக இது போன்ற ஒரு காலத்தில்?
இது மிகவும் முக்கியமானது. ஒரு நாட்டில் ஒரு நல்ல கலைபடைப்புத் தொழில் இருக்குமாயின் அங்குள்ள மக்களுக்கு நல்ல மனப்பான்மை இருக்கும். நல்ல மனப்பான்மை உள்ளவர்கள் நல்ல நடத்தை உடையவர்கள்; இது பொருளாதாரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மக்களின் நடத்தையை மாற்றக்கூடிய ஒரு ஊடகமாக கலையை பார்க்க முடியும். கலை மனிதநேயம், அன்பு, நட்பு, சுதந்திரம், பொருளாதாரம், நல்லிணக்கம், பன்முகத்தன்மை, உரிமைகள் மற்றும் பலவற்றைப் பற்றி பேசுகிறது. இது மக்களின் மனநிலையை அறிந்து அதை மாற்றக்கூடிய ஒரு ஊடகம். ஒரு நாட்டை மாற்றும் பொறுப்புள்ள குடிமக்களே நமக்கு தேவை. நாங்கள் அரசாங்கத்தை குறை கூறுகிறோம் ஆனால் அரசாங்கம் என்பது மக்களின் பிரதிபலிப்பு ஆகும். மக்கள் எல்லாவற்றை பற்றியும் பொறுப்புடன் இருந்தால், அவர்களால் மாற்றத்தை கொண்டு வர முடியும். அந்த மாற்றத்தை ஏற்படுத்த, கலை ஒரு வலுவான ஊடகம்.
7. கலை வெளிப்பாட்டின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
AI போன்ற புதிய தொழில்நுட்பம் மற்றும் projection, holograms மற்றும் புதிய கருவிகள் போன்ற ஊடகங்கள் உருவாகிவருவதால், உண்மையான படத்தின் சாயலுக்கு ஒத்து செல்லும் விளக்கப்படங்களை உருவாக்க முடியும்; வெளிவரும் படைப்பின் முடிவிற்கு அமைய கலை வகை மாறும். எது வெளிவருகிறதோ அது ஒரு படைப்பாளிக்கு பயன்படும் கருவியாகும். கலை கூட ஒரு இயக்கத்தில் உள்ளது, அது நிலையானது அல்ல. எனவே புதிய தொழில்நுட்பத்துடன் கலை மக்களைச் சென்றடையும் விதத்தை பொருத்து மாறும்.
8. கலைஞராகிய உங்களின் முக்கிய குறிக்கோள் என்ன?
புகைப்படம் என்பது காட்சித் தகவல்தொடர்பாடல். மக்கள் மீது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விடயங்களை என்னால் உருவாக்க முடியும்; அவர்களின் உணர்வையும் அணுகுமுறையையும் மாற்றினால், நான் அவர்களை குணப்படுத்தி, எனது புகைப்படங்கள் மூலம் அவர்களை வழிநடத்த முடியும். உண்மையானதை வெளிக்கொண்டுவரும் ஊடகமே இது. எனது முயற்சியின் மூலம் மக்களை வழிநடத்த முடிந்தால், அதுவே எனது இலக்காக அமையும்.
9. கலை ஒத்துழைப்பில் உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா அல்லது அது அவர்களின் தனிப்பட்ட படைப்பு வெளிப்பாட்டைப் பாதிக்கும் என நினைக்கிறீர்களா?
நான் ஒத்துழைத்து செயற்படுவதை நம்புகிறேன். ஒத்துழைப்புடன் செயற்படுவதால் நீங்கள் தனித்துவமான மற்றும் சிறப்பு வாய்ந்த விடயங்களை வெளிக்கொண்டுவர முடியும் என்று நான் நம்புகிறேன். நீங்கள் ஒருவருடன் ஒத்துழைக்கிறீர்கள் என்றால், அது முறையான ஒத்துழைப்பானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுடன் இணைந்து செயற்படும்போது, யாரேனும் ஒருவருக்கு தங்கள் கருத்தை வெளிப்படுத்த முடியாவிட்டால், அந்த ஒத்துழைப்பு தோல்வியுற்றதாக கருதப்படும். எனவே ஒத்துழைப்பு முறையானதாக இருக்க வேண்டும். கூட்டுப்பணியாளர்கள் ஒரே தொனியில் இருக்க வேண்டும். உங்களிடம் அந்த திறமை இருந்தால், அதை நன்றாக வெளியே கொண்டு வர முடியும். இல்லையெனில், உங்களால் ஒத்துழைக்க முடியாவிட்டால், தனியே தனிப்பட்ட கலையாக வெளிப்படுத்துவதாக இருப்பதும் சிறந்தது.
10. பயனுள்ள கலை என்றால் என்ன: தூய உணர்ச்சிபூர்வமான வெளிப்பாடு அல்லது உணர்வுபூர்வமான வேலை?
நீங்கள் ஒரு அளவிற்கு திட்டமிடலாம், ஆகவே மீதமுள்ளவை பிரபஞ்சத்தைப் பொறுத்தது. நீங்கள் சரியான நேரத்தில் சரியான இடத்தில். நான் கேமரா வைத்திருக்கும் பல இடங்களில் நான் சரியான நேரத்தில் இருந்தேன். அது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். நான் வீட்டிற்கு வரும்போது, நான் ஒரு பயணத்திற்குச் செல்லும் போது அல்லது நான் திட்டமிட்டுச் செல்லும் போது அது நடக்கலாம். நீங்கள் ஒருபோதும் அதை அறிய முடியாது. ஆவண புகைப்படம் எனது வேலைக்கு எப்போதும் கேமரா வைத்திருப்பது நல்லது. சரியான தருணம் எப்போது கிடைக்கும் என்று தெரியாது. பல முறை, நான் ஒரு விடயத்தைத் திட்டமிடுவேன், ஆனால் நான் ஏதோ ஒன்றை இறுதியில் கண்டறிவேன், அதுவும் நன்றாகவே திகழும். நீங்கள் எந்தவொரு விடயத்தையும் ஒரு அளவிற்கே திட்டமிடலாம். ஆனால் சிலசமயங்களில் அந்த திட்டத்துடன் கூட நீங்கள் விரும்பியதைப் பெற முடியாமல் போய்விடும். மேலும் நான் திட்டமிட்ட போட்டோஷூட் பற்றி பேசவில்லை. ஆவண புகைப்பட கலைபடைப்பில், அது அவ்வாறு செயற்படாது. சில நேரங்களில் நீங்கள் திட்டமிட்டு நீங்கள் விரும்புவதைப் பெறலாம், அல்லது உங்களுக்கு கிடைப்பது சில சமயங்களில் நீங்கள் எதிர்பார்த்தது அல்ல . நீங்கள் மிகவும் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.