
Artist
Art as a creative medium, I believe, has the power to communicate deep messages to the general public in an extremely effective way. As a creative, I also believe that we have a certain responsibility to use our creativity to bring public attention to important issues like climate change and social/political concerns.
Instagram - @threeeyesonemind
What are your thoughts on Activism and Art?
I believe activism and art are two things that easily go hand in hand. Art as a creative medium has huge potential to convey important messages to the masses very effectively, and also get people’s attention to important social/political issues that wouldn’t receive the same spotlight without art.
How will you integrate the monetary support and what you learned at the workshop into your artwork?
I plan to use the monetary support I received to upgrade my current PC build (which I use to create my art daily) as it would be a great benefit for me as an artist in the long run. As to the things I learned in the workshops, it has been very informative to know the viewpoints and ideas that other artists have, and I think it will definitely impact my own creative process in the future.
What is holding back Sri Lankan creatives?
Personally I believe Sri Lankan creatives (especially visual artists) are being held back a lot by the current economical condition where they are unable to pursue their passion with full conviction without having to sacrifice their livelihood most of the time. I think this is because Sri Lankan creative talent is not properly recognized as contributors to the economic structure, and therefore is given less opportunities by the economy. From a more creative perspective, I think artists too need to speak on more topics that may be uncomfortable/taboo if they believe it is important to be expressed.
What is your major goal as an artist?
One of, if not my main goal as an artist personally is to always create artwork with deep meaning that will get the viewer thinking. Essentially to create a dialogue in the viewer’s head long after they’ve viewed the artwork itself, in hopes that the artwork will hopefully in turn help someone else create something new.
How important is community to you?
I believe community is extremely vital to an artist such as myself, since I am a freelancer, my entire presence in society is based on the community that views my artwork, so it is as important to me as my artworks themselves.
I believe community is extremely vital to an artist such as myself, since I am a freelancer, my entire presence in society is based on the community that views my artwork, so it is as important to me as my artworks themselves.
Are you willing to collaborate with other artists for societal change?
Absolutely. Most of the artists of our group are people are artists I’ve already worked with during the Aragalaya period a few years back, so I’d love to link up with them again and create something exciting that helps the society as well.
1. செயல்பாடு மற்றும் கலை (Activism and Art) பற்றிய உங்கள் கருத்து என்ன?
Activism மற்றும் கலை ஆகியவை எளிதில் கைகோர்க்கும் இரண்டு விடயங்கள் என்று நான் நம்புகிறேன். கலை எனும் செல்வாக்குள்ள ஊடகம், மக்களுக்கு முக்கியமான செய்திகளை மிகத் திறம்பட தெரிவிக்கும் பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது, மேலும் கலைபடைப்பின் பயன்பாடு இன்றி கவனத்தைப் பெறாத முக்கியமான சமூக/அரசியல் பிரச்சினைகளுக்கு மக்களின் கவனத்தை ஈர்க்க இது முக்கியம்.
2. பண உதவி மற்றும் பயிற்சிப்பட்டறையில் நீங்கள் கற்றுக்கொண்டவற்றை உங்கள் கலைப்படைப்பில் எவ்வாறு ஒருங்கிணைப்பீர்கள்?
தற்போது நான் தினமும் எனது கலையை உருவாக்க பயன்படுத்தும் கணணி கட்டமைப்பை மேம்படுத்தவே நான் பெற்ற பண உதவியை பயன்படுத்த திட்டமிட்டுள்ளேன், ஏனெனில் இது நீண்ட காலத்திற்கு ஒரு கலைஞனாக எனக்கு இது பெரும் பலனாக அமையும். பயிற்சிப்பட்டறைகளில் நான் கற்றுக்கொண்ட விடயங்களைப் பொறுத்தவரை, மற்ற கலைஞர்களின் கண்ணோட்டங்கள் மற்றும் யோசனைகளை அறிவது மிகவும் பயனுள்ளதாக இருந்தது, மேலும் இது எதிர்காலத்தில் எனது சொந்த படைப்பு செயல்முறையை நிச்சயமாக செல்வாக்கு செலுத்தும் என்று நினைக்கிறேன்.
3. இலங்கைப் கலைஞர்களைத் தடுத்து நிறுத்துவது எது?
தனிப்பட்ட முறையில், இலங்கைப் படைப்பாளிகள் (குறிப்பாக காட்சிக் கலைஞர்கள்) தற்போதைய பொருளாதாரச் சூழலால் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர், காரணம் அவர்களால் பெரும்பாலான நேரங்களில் தங்கள் வாழ்வாதாரத்தைத் தியாகம் செய்யாமல் முழு நம்பிக்கையுடன் தங்கள் கலை மீதான ஆர்வத்தைத் தொடரமுடியவில்லை. இதற்குக் காரணம் இலங்கையின் படைப்பாற்றல் திறமைகள் பொருளாதாரக் கட்டமைப்பின் பங்களிப்பாளர்களாக சரியாக அங்கீகரிக்கப்படாததாலும், அதனால் பொருளாதாரத்தால் குறைந்த வாய்ப்புகள் வழங்கப்படுதல் என்று நான் நினைக்கிறேன். மிகவும் ஆக்கப்பூர்வமான கண்ணோட்டத்தில், கலைஞர்கள் சங்கடமான/தடைசெய்யக்கூடிய பல தலைப்புகள் பற்றி வெளிப்படுத்துவது முக்கியம் என்று அவர்கள் நம்பினால், அதை பற்றி பேச வேண்டும்.
4. ஒரு கலைஞராக உங்கள் முக்கிய குறிக்கோள் என்ன?
அதில் ஒன்று, தனிப்பட்ட முறையில் ஒரு கலைஞராக எனது முக்கிய குறிக்கோள், பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் ஆழமான அர்த்தத்துடன் எப்போதும் கலைப்படைப்பை உருவாக்குவது. அதனூடாக இறுதியில் அவர்கள் கலைப்படைப்பைப் பார்த்த பிறகு நீண்ட காலத்திற்குப் பின் பார்வையாளர்களின் தலையில் ஒரு உரையாடலை ஏற்படுத்துவது, மற்றும் அந்த கலைப்படைப்பு வேறு யாரையாவது புதிதாக உருவாக்க உதவும் என்ற நம்பிக்கையில் ஆகும்.
5. சமூகம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானது?
என்னைப் போன்ற ஒரு கலைஞருக்கு சமூகம் மிகவும் இன்றியமையாதது என்று நான் நம்புகிறேன. நான் ஒரு freelancer என்பதால், சமூகத்தில் எனது முழு இருப்பும் எனது கலைப்படைப்பைப் பார்க்கும் சமூகத்தை அடிப்படையாகக் கொண்டது, எனவே சமூகம் என்பது எனது கலைப்படைப்புகளைப் போலவே எனக்கு முக்கியமானது.
6. சமூக மாற்றத்திற்காக மற்ற கலைஞர்களுடன் ஒத்துழைக்க விரும்புகிறீர்களா?
நிச்சயமாக. எங்கள் குழுவில் உள்ள பெரும்பாலான கலைஞர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு போராட்ட காலத்தில் (aragalaya period) நான் ஏற்கனவே பணியாற்றிய கலைஞர்கள், எனவே அவர்களுடன் மீண்டும் இணைந்து, சமூகத்திற்கும் உதவும் வகையில் உற்சாகமான ஒன்றை உருவாக்க விரும்புகிறேன்.